நடிகர் தனுஷிற்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:34 IST)
நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக கூறி மேலூர் கதிரேசன் தம்பதியினர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 13 ல் நடிகர் தனுஷ்  ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 


 
தனுஷ் தரப்பு பொய்யான அவங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளனர் என்று மதுரை மாநகர் ஆணையரிடம் கதிரேசன் தரப்பினர் புகார் அளித்திருந்தனர்.
 
இந்த புகாரை விசாரிக்க கோரிய வழக்கை விசாரித்த  ஜே.எம்.6 நீதிபதி சாமூண்டீஸ்வரி பிரபா, தனுஷ் தனது பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்