விஷால் கல்யாணம் இப்போதைக்கு இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 7 மே 2017 (06:30 IST)
நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்று பிடிவாதமாக இருக்கும் விஷால், கடந்த மாதம் கட்டிடத்திற்கான பூஜை போட்டவுடன் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.





ஆனால் திடீரென நீதிமன்றம் நேற்று கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் இடத்தில் சாலை ஆக்கிரமித்தது உண்மை என்றால் கட்டிடம் கட்ட நிரந்தர தடையோ அல்லது வேறு பிளான் போட்டு அது அப்ரூவ் ஆகும் வரை தடை நீடிக்கவோ வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் கட்டிடத்தின் பணி பாதிக்கப்பட்டு இன்னும் ஒருசில ஆண்டுகள் ஆகலாம். எனவே கட்டிடம் முடித்தவுடன் தான் திருமணம் என்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் கட்டிடத்தின் தடை நீங்கி, கட்டிடம் கட்டி, விஷாலின் திருமணம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
அடுத்த கட்டுரையில்