இதுவொரு டெக்னிக்கல் தவறு: அஜித் பரிசு கொடுத்த வாட்ச் குறித்து நடிகர் விவேக்

Webdunia
ஞாயிறு, 7 மே 2017 (05:22 IST)
தல அஜித்தின் மனிதாபிமானம், உதவி செய்யும் மனப்பான்மை உலகே அறிந்தது. இதற்கு இன்னொரு உதாரணமாக நடிகர் விவேக் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.



 


அஜித்தும், விவேக்கும் ஒருநாள் காரில் படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அஜித்தின் கையில் இருந்த விலையுயர்ந்த வாட்ச், விவேக்கை மிகவும் கவர்ந்தது. உடனே விவேக் அஜித்திடம், 'நானும் ஒருநாள் கண்டிப்பாக இதேபோன்ற ஒரு வாட்ச்சை வாங்குவேன்' என்று கூறியுள்ளார்.

உடனே விவேக் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அஜித் தனது கையில் இருந்த வாட்சை கழட்டி விவேக் கையில் மாட்டிவிட்டாராம்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அஜித், விவேக்கிறகு கொடுத்தது ரோலக்ஸ் வாட்ச் என்று செய்தியாக வந்தது. இந்த செய்தி குறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியபோது, 'இந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் தவறு உள்ளது. அது ரோலக்ஸ் வாட்ச் இல்லை, Seiko வாட்ச்' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்