மாதவனின் மாறா திரைப்படம் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:12 IST)
மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா திரைப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பல படங்கள் ஓடிடியில் ரிலிஸ் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸாகின. அந்த வரிசையில் மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக இருந்ததால் ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்தனர்.

அந்த படத்தை அமேசான் ப்ரைம் வாங்கியிருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8 ஆம் தேதி ரிலிஸாகவுள்ளதாக அறிவித்துள்ளது. மாறா திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக் ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்