பொங்கலுக்கு நடத்தறோம் மாநாடு..! – சிம்புவின் அடுத்தடுத்த அப்டேட்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (10:53 IST)
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தனது அடுத்த பட அப்டேட் ஒன்றையும் பொங்கலுக்கு வெளியிடுகிறார் சிம்பு.

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஈஸ்வரன். இதுதவிர வெங்கட் பிரபுவின் மாநாடு, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சிம்பு. ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகும் அதே சமயம் தனது அடுத்த பட அப்டேட்டை வெளியிடுகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை பொங்கல் அன்று மாலை 04.05 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிம்புவின் அடுத்தடுத்த அப்டேட்களால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்