மாநாடு படத்துக்கும் கதை திருட்டு பிரச்சனையா? நோட்டீஸ் அனுப்பினாரா கொரிய தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (12:30 IST)
மாநாடு படம் கொரியன் படமான ஏ டே என்ற கொரிய படத்தின் காப்பி என்று இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிரைலரிலும் போஸ்டர்களிலும் வெளியான சில காட்சிகள் கொரியன் படமான எ டே (A Day) படத்தை ஒத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கொரிய படத்தின் தயாரிப்பாளர் மாநாடு படத்தின் தயாரிப்பாளருக்கு இது சம்மந்தமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்