மாநாடு படம் நாளை ரிலீஸ்....ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (22:25 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்படம் நாளை ரீலிஸ் ஆகும் என தகவல் வெளியாகிறது.
 
மாநாடு திரைப்படம் ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது என்பதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று மலை  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்சசி அடைந்தனர்.  தற்போது ஒரு முக்கிய தகவல்  வெளியாகிறது. அதில், நாளை திட்டமிட்டபடி மாநாடு பட  வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.. இதை நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு ரிடுவீட் செய்து உறுதிசெய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்