’விருமன்’ இசை விழாவுக்கு எனக்கு அழைப்பு கூட இல்லை: பாடலாரிசியர் சினேகன் வருத்தம்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (12:02 IST)
சமீபத்தில் மதுரையில் ’விருமன்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு கூட இல்லை என இந்த படத்தின் பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் ’விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது என்பதே இந்த விழாவில் படக்குழுவினர் மட்டுமின்றி சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ‘வானம் கிடுகிடுங்க’ என்ற  பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் தனக்கு ’விருமன்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்றும் இன்னும் கொஞ்ச காலத்தில் பாடலாசிரியர் என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்