பொங்கல் தினத்தில் வெளியாகும் 2 லைக்கா நிறுவனத்தின் படங்கள்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (17:09 IST)
வரும் பொங்கல் தினத்தில் ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'லால் சலாம்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் அதே பொங்கல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய நான்கு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்பது சந்தேகமே. 
 
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அருண் விஜய் நடித்த  ’மிசின் 1’ என்ற திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது,. 
 
லால் சலாம் மற்றும் ’மிசின் 1’ என இரண்டு படங்களை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்