நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடி?

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (14:24 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் 5 நாட்களில் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நயன்தாரா இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக வழக்கத்திற்கு மாறாக புரமோஷன் செய்தார் என்பதும் இருப்பினும் இந்த படம் மக்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
திரையரங்குகளில் பெறும் வரவேற்பு பெறாத இந்த படம் ஓடிடியில் வரவேற்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்