'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:20 IST)
'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் லால் சலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது  நடிகர்கள் டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்' படத்தை தமிழகத்தில்   உள்ள தியேட்டர்களில்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

எனவே இப்படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,   தீபாவளி பண்டிகையொட்டி, லால் சலாம் பட டிரைலர் வரும் நவம்பர் 12 ஆம் தேதி காலை 10;45 க்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

அதேபோல் இப்படம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். லால்  சலாம் பட டீசர் 1 நிமிடம் 34 செகண்ட் கால அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்