அப்போது அங்கு வந்த நடிகை ரஞ்சனா பேருந்தை நிறுத்தி, ஓட்டுனரை திட்டியதுடன், நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி, மாணவர்களை தாக்கினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இவரது செயலுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. இந்த நிலையில், படிக்கெட்டில் தொங்கிய மாணவர்களை தாக்கியது, மட்டுமில்லாமல், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அவதூறு வார்த்தைகளால் பேசியதாகவும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார் மீது ஓட்டுனர் சரவணன் அளித்த புகாரில் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மாங்காடு போலீஸார் கைது செய்தனர்.