'கேப்டன் மில்லர்’ படத்தின் உரிமையை பெற்றது பிரபல நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:48 IST)
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைக்கா நிறுவனம் அந்த படத்தின் மூலம் மிகப் பெரிய லாபம் பெற்றது. அதேபோல் கேப்டன் மில்லர் படத்திலும் லாபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
தனுஷின் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பெற்றதை அடுத்து வெளிநாடுகளில் இந்த படம் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்