மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன்… நடிப்பு & இயக்கம் குறித்து பேசிய லோகேஷ்!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (07:01 IST)
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  சமீபத்தில் வெளியானது.

இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்கள். இது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் நடிப்பு மற்றும் இயக்கம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து வரும் எந்த வாய்ப்பையும் என்னால் மறுக்க முடியாது. எனக்கு நடிக்கவேண்டுமென்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இந்த ஆல்பத்தில் நடித்த பின்னர் கொஞ்சம் தன்னம்பிக்கை வந்துள்ளது. அதற்குக் காரணம் ஸ்ருதிஹாசன்தான். ஏற்கனவே மூன்று படங்களை இயக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். அதை முடிக்க வேண்டும். முதலில் தலைவர் 171 படம் மற்றும் அதன் பிறகு கைதி 2 படத்தை இயக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்