தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு.. இன்றே விசாரணைக்கு வரும் ‘லியோ’ வழக்கு..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (12:54 IST)
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
வரும் 19ஆம் தேதி வெளியாகும் ‘லியோ’ திரைப்படம்  அதிகாலை 4 மணி காட்சிக்கு வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அதேபோல் காலை 9 மணிக்கு காட்சியை காலை 7:00 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐபோட்டில் அவசர மனுதாக்கல் செய்து உள்ளது.  
 
இந்த அவசர மனு இன்றே விசாரணைக்கு வர உள்ளது என்றும் நீதிபதி அனிதா சுமந்த் விசாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.  இந்த வழக்கின் விசாரணையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்