பப்ஜி கேமுக்கு போட்டியாக புதிய கேம் ! முன்னணி நடிகர் வெளியிடுகிறார் !

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:09 IST)
கடந்த செப்டம்பர் மாதம்  100க்கும் மேற்பட்ட சீனா நாட்டைச் சேர்ந்த செயலிகள் ,பப்ஜி விளையாட்டுகளுக்கும், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, பப்ஜி இந்தியா என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி பப்ஜி இந்தியா கேம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பப்ஜி மொபைல் இந்தியா என்னும் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் மத்திய அரசு இளைஞர் மற்றும் சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டு கேமான பப்ஜியை தடை செய்தது.

இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தாலும் புதிய பாஜி விளையாட்டு வரவுள்ளதாக  நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பப்ஜி மீதான தடையை நீக்க சீன நாட்டுடனான உறவை துண்டிக்க சீன கேமிங் நிறுவனமான டென்சென்னிடம் இருந்து அதன் உரிமையை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  nCore  Games என்ற நிறுவனம் FAU G என்ற விளையாட்டை வடிவமைத்துள்ளது.

இந்த விளையாட்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தாக்குதல் நடைபெற்று உலக நாடுகளிடையே பரப்பரப்புக்கு உள்ளாக்கிய  கள்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிறது.

மேலும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்தியாவில் இந்த கேம் அறிமுகப்படுத்தப்படும்  எனவும் இந்த கேம் விளையாட்டி தூதுவரும் 2.0 ல் ரஜினியின் வில்லனாகவும் பஷிராஜனாக நடித்த   அஜ்ஷய்குமார் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். https://play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்