கல்லா கட்ட தொடங்கிய கேஜிஎப் 2… ஆடியோ உரிமம் இத்தனைக் கோடியா?

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (11:27 IST)
கேஜிஎப் 2 வின் ஆடியோ உரிமையை லகரி நிறுவனம் 7 கோடிக்கு  மேல் கொடுத்து வாங்கியுள்ளதாம்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

இந்த படத்தின் வியாபாரம் முதல் பாகத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என சொல்லபடுகிறது. இந்நிலையில் 6 மொழிகளில் இந்த படத்துக்கான ஆடியோ உரிமம் சுமார் 7.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். லகரி ஆடியோ நிறுவனம் இதைக் கைப்பற்றியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்