மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் தன் மகள் சொன்ன ஒற்றை வரிக் கதையால் ஈர்க்கப்பட்டதாலும், ஆனால் அதைப் படமாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் வேறு ஒரு திரைக்கதையை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்துக்கு ப்ரோ டாடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் கலகலப்பான ஒரு படமாக இருக்கும் என இயக்குனர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனா காரணமாக மலையாள சினிமாவில் மகிழ்ச்சியான படங்கள் வரவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.