"அமேசான் காட்டில் நுழைந்த அனகோண்டா" விஷாலை கிண்டலடித்த நபரை திட்டிய குஷ்பு!

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (09:58 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படும் விஷால் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் "ஆக்ஷன்" படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த ரசிகர்ளின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. இதனால் எதிர்பார்த்த கலெக்ஷனில் பாதி கூட தேறவில்லை. இருந்தாலும் விஷாலோ அல்லது சுந்தர் சியோ இதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. காரணம் அவர்கள் இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் "அனகோண்டாவும் அமேசானும்" என குறிப்பிட்டு விஷால் குஷ்பூவை கிண்டலடித்துள்ளார். அந்த கமெண்ட்டிற்கு ரிப்ளை செய்த குஷ்பு உங்க அம்மா என்ன filpkart ஆ..? என கேட்டு நக்கலாக சிரித்துள்ளார். 
 
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலை அனகோண்டா என குறிப்பிட்டு மோசமாக கிண்டலடித்திருந்தார். ஆனால், அவர் நடிகர் விஷாலை சொல்லவில்லை என அந்த வீடியோவிலே குறிப்பிட்டிருந்தார். 
   

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்