குழந்தைகளைக் கவர்ந்த குரங்கு பெடல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (14:44 IST)
தமிழ் சினிமாவில் மதுபானக் கடை என்ற வித்தியாசமான திரைப்படம் மூலமாக அறிமுகமானார் இயக்குனர் கமலக் கண்ணன். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து அவர் சிபிராஜ், ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் வட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படம் விமர்சன் ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து அவர் குழந்தைகளை வைத்து குரங்கு பெடல் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை சிவகார்த்திகேயன தன்னுடைய ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம் மூலமாக கடந்த மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார்.

படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஜூன் 3 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்