கொட்டுக்காளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:00 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இது குறித்து பல தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் விவாதங்கள் நடந்தன. இதுபோன்ற ஒரு விவாதத்தைதான் தான் உருவாக்க விரும்பியதாக இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் வரும்  செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவுக்கு வெளியே சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இந்தியாவுக்குள்ளும் அதே தேதியில் ஏதேனும் ஒரு ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்