தவறுதலாக அஜித் வீட்டு கதவை தட்டி விட்டேன்: பிரபல நடிகர்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (17:10 IST)
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் காமெடி ரோலில் நடித்துள்ளவர் டோனி.
 
இவர் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் வேலை பார்த்துள்ளார். கோலமாவு கோகிலா படத்துக்காக பேட்டி கொடுத்தவர் அஜீத் பற்றி வெகுவாக புகழ்ந்தார். அவள் வருவாளா படப்பிடிப்பில் அஜித் மிகவும் ஜாலியாக இருப்பார், நடன கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார் என்றும் கூறினார். ஒருமுறை அஜித் வீட்டுக்கு சென்றதாக கூறினார்.
 
தான் ஒரு மிகப்பெரிய மியூசிக் கான்செட் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதில் மால்குடி சுபா பாடுவதாக இருந்தது என்றார். அதற்காக அவரை சந்திக்க வீட்டுக்குச் சென்றபோது சுபா வீட்டுக்கு பதிலாக அஜித்தின் வீட்டு கதவைத் தட்டினாராம்.
 
அப்போது கதவை திறந்த அஜித் என்ன நீ இங்கு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். தவறாக இந்த வீட்டை தட்டிவிட்டதாக அஜித்திடம் டோனி தெரிவித்துள்ளார். அஜித் மிகவும் ஜாலியான, நல்ல மனிதர் என புகழ்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்