கோலமாவு கோகிலா என்ற பெயருடன் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னாடி 'எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு', என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலுடன், கடந்த வெள்ளிக்கிழமை படம் பார்க்க சென்றனர்.
படத்தைப் பார்த்த அத்தனை ரசிகர்களும் வயிறு குலுங்க சிரித்து வெளியே வந்தனர். படத்தின் பாடல்கள், காமெடி கதை என அத்தனையும் சூப்பர் என்று நயன்தாராவை புகழ்ந்து தள்ளினர். யோகிபாபுவையும் புகழ்ந்து பாராட்டினர்.