கோலமாவு கோகிலா படத்தின் வெளியான முக்கிய தகவல்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (11:23 IST)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா, சுருக்கமாக கோகோ என அழைகப்படுகிறது. ஹீரோயினை முன்னிலைப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. 
ஹீரோயினாக நயன்தாரா பிரதான வேடத்தில், மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறாராம். ஒரு பெண் தன் வறுமையை போக்க போதை மருந்து கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். அது என்ன  ஆகிறது என்பதுதான் கதையாம். மேலும் இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன்  குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்