கேஜிஎஃப் 2… எல் டோரடாவுக்கு செல்லும் வழி…. வெளியானது மேக்கிங் வீடியோ!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (09:33 IST)
கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மூன்றாவது வாரத்தில் கூட கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மிரடலான மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது. இரண்டு பாகங்கள் கொண்ட மேக்கிங் வீடியோவின் முதல் பாகம் தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்