தம்பி பாப்பாவுக்கு தாலாட்டு பாடும் ராக்கி பாய் மகள் - சூப்பர் கியூட் வீடியோ!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (08:33 IST)
KGF படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டாராக திகழும் நடிகர் யாஷ் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவர் மொக்கின மனசு என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு அய்ரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. அய்ரா கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் பேமஸ். அதற்கு காரணம் யாஷ் அடிக்கடி அய்ராவின் கியூட் வீடியோக்களை சமூகலைத்தளத்தில் பதிவிடுவது தான். மேலும், கடந்த ஆயுஷ் என்ற மகன் பிறந்தநாள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தால் வீட்டில் இருந்து வரும் யாஷ் தனது முழு நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். தற்போது தனது செல்ல மகள் அய்ரா அவரது தம்பி ஆயுஷை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் சூப்பர் கியூட் வீடியோ ஒன்றை  ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கன்னட சினிமா ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த யாஷ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பாப்பா அய்ராவின் பாசத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And just like that our baby girl turns 18months today!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்