இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிவால்வர் ரீட்டா’ டீசர் ரிலீஸ்!

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (07:20 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது. பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் பேபி ஜான் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்