பாலிவுட் நடிகருடன் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்... வேற லெவல் விடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (08:57 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யை காதலித்து வருவதாகவும் அதனால் அவரது மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியானது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். திரைப்படம் ரேஞ்சுக்கு விறுவிறுப்பாக செம சூப்பரா வந்திருக்கும் இந்த விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிகரையே ஓடி ஓடி நடிக்க வைத்துள்ளார் என பிரபலங்கள் பலரும் மிரண்டு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்