பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கீர்த்தி செய்த வேலை! ஷாக்கிங் புகைப்படம்!

Webdunia
புதன், 22 மே 2019 (12:25 IST)
தமிழ் சினிமா திறமையான பல மலையாள கதாநாயகிகளை இறக்குமதி செய்துள்ளது. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 


 
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும்  பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு முந்தியடிக்கிறார்கள்.
 
இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் திரையுலகில் புதுப்படமொன்றில் அறிமுகமாவிருக்கிறார். இந்தப் படத்தை  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும்,  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
பாலிவுட் நடிகைகளை போன்றே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வரவிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இதற்காக சமீபகாலமாக உடலை குறைத்து ஒல்லியாக மாறும்  முயற்சியில் படுமும்முரமாக  ஈடுபட்டு தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ளார் கீர்த்தி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்