குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (13:44 IST)
ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மார்க் சாலிங் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 35 வயதான அவர் க்ளீ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். 
குழந்தைகள் ஆபாச பட வழக்கில் சிக்கியவர் மார்க் சாலிங். மார்க் சாலிங் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள் வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலியல்  ஆபாச குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், 35 வயதான முன்னாள் காதலியான ராக்ஸானே கொர்செலா பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதாக மார்க் சாலிங் எதிராக வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததை மார்க் சாலிங் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புக் கொண்டார். வரும் மார்ச் மாதம் இந்த  வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தனது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் மார்க் சாலிங்கிற்கு 4  முதல் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. தீர்ப்பு வழங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மார்க் தற்கொலை  செய்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்