கவின் படத்தில் இருந்து விலகிய அனிருத்?... பின்னணி என்ன?

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (13:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உரிய நேரத்தில் பாடல்கள் கொடுக்காததால் தாமதமாகி வந்தது.

இதனால் இப்போது இந்த படத்தில் இருந்து இப்போது அனிருத் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்க்கு பதிலாக டாடா மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ஜென் மார்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்