பிக்பாஸ் வீட்டில் நேற்று சரவணன் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் வருத்தத்தில் இருந்தாலும் இன்று அதனை மறந்துவிட்டு இயல்பாகிவிட்டனர்.
இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை ரிஸ்க் எடுத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வரும் நிலையில் கவின், மற்றும் சேரன் ஆகிய இருவரும் கீழே விழுந்து காயம் அடைவதாக இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது.
இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் துள்ளி குதித்து விளையாடுவதை பார்த்தால் சரவணனை கிட்டத்தட்ட அனைவரும் மறந்துவிட்டதாகவே தெரிகிறது.