பின்னர், முதலாவது ஆளாக அபிராமி வந்து அவரது அம்மாவை பற்றிய ஒரு சில விஷயங்ககளை பகிர்ந்துகொண்டார். அதாவது " என் அம்மாவை தவிர வேறு யாரும் என்னுடன் அவ்வளவு நெருங்கி பழகியதில்லை... அப்பா, அம்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். எனது அம்மா எனக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காங்க..அதனால் என் அம்மா தான் என்னுடைய ஃபிரண்ட். ஆனால் , எனக்கு நீ வேண்டாம் என்று சொல்லி என் அம்மாவை விட்டுவிட்டு 4 மாதங்களாக பிரிந்திருந்தேன். ஐம் ரியலி சாரி மா" என்று கூறி கண்கலங்கி அழுதார்.