வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயனுக்கு கஸ்தூரியின் கேள்வி!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (12:05 IST)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நடிகை நயன்தாராவுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடந்த நிலையில் திடீரென நேற்று தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
திருமணமாகிய நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என ஏராளமானோர் கேள்வி எழுப்பிய நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ’மருத்துவரீதியாக தவிர்க்க முடியாத சில காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டம் 2002 ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் இதைப்பற்றி இன்னும் நிறைய கேள்வி படுவோம் என்றும் பதிவு செய்துள்ளார்
 
நடிகை கஸ்தூரியின் இந்தப்பதிவால் அரசின் தடையை மீறி நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்