செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பொ.செ-1 படத்தைப் பார்த்துவிட்டு, டிவிட்டர் பக்கத்தில் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், வாசிப்பு அனுபவத்தின் உச்சமான 'பொன்னியின் செல்வன்' நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேறியுள்ளது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என அத்தனை பரிணாமங்களிலும் உச்சம் தொட்ட இத்திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு 'மணி'மகுடம். எனப் பாராட்டியுள்ளார்.