மின்னல் வேகத்தில் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பை நடத்தும் கார்த்திக் சுப்பராஜ்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:11 IST)
ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனும், எஸ் ஜே சூர்யா எதிர்நாயகனாகவும் நடிக்கிறார். கடந்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இதுவரை 36 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ். ஊட்டிக்கு அருகே கிராமத்தில் சுமார் 100 குதிரைகள் மற்றும் 1000 ஜூனியர் நடிகர்களுடன் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடந்து வருகிறதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்