மாறன் படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் ‘நிறங்கள் மூன்று’…. வெளியான புதிய போஸ்டர்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:46 IST)
கார்த்திக் நரேன் தன்னுடைய முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான’மாறன்’ கடந்த மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியான உடனே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதிகளவு சமூகவலைதளங்கள் ட்ரோல் ஆனது. சமீபகாலத்தில் இந்தளவு ட்ரோல்களை சந்தித்த படம் எதுவும் இல்லை என்ற அளவுக்கு ஆனது.

மாறன் படப்பிடிப்பு சமயத்தின்போதே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும், அதனால் கார்த்திக் நரேன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டே வெளியே சென்றுவிட்டதாகவும், தனுஷே பல காட்சிகளை இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் ஒருவழியாக படம் முடிந்து ரிலிஸானது. ஆனால் படத்துக்காக எந்த ப்ரமோஷனிலும் தனுஷும் இயக்குனரும் சேர்ந்து கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் மாறன் படத்துக்குப் பிறகு மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்பும் முனைப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோரை வைத்து இயக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இன்று நடிகர் சரத்குமாரின் பிறந்த தினம் என்பதால் அவருக்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்