பொன்னியின் செல்வன் -1 படத்துடன் மோதும் தனுஷ் படம் ?

செவ்வாய், 12 ஜூலை 2022 (23:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படம் பொன்னியின் செல்வன் படத்துடன்  ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.  இப்படத்தை அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்பட்த்தின் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இவர்கள் மூவரும் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தயார் நிலையில்  இருப்பதாகவும், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி  ரிலீஸாக  உள்ளதாகக் கூறப்படுகிற்து.

அதே தேதியில்தான் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படமும் ரிலீஸாகவுள்லதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துளது.

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் தேதி உருறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவினர், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.
 

இதற்கு முன்னதாக தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி க்ரே மேன் ஜூலை 22 ஆம் தேதியும், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம்  வரும் ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்