கைதி 2 பற்றி லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த கார்த்தி!

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (07:22 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இதனால் அவரின் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் கைதி 2 திரைப்படம் இப்போதைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கைதி 2 பற்றி பேசியுள்ள நடிகர் கார்த்தி “கைதி 2 திரைப்படம் ஜனவரி 2024 ஆம் ஆண்டே தொடங்க வேண்டி இருந்தது. ஆனால் லோகேஷ் ரஜினி சார் படத்தில் கமிட் ஆனதால் தாமதம் ஆகிறது. அந்த படம் முடிந்ததும் அடுத்து கைதி திரைப்படம் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்