இன்று கார்த்தி நடிப்பில் இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திற்காக பூஜை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கார்த்தி நடிப்பில் இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திற்காக பூஜை போடப்பட்டுள்ளது.
இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.லட்சுமன்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். நானும் ரவுடிதான், தெறி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜார்ஜ்.சி வில்லியம்ஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ரூபான் இப்படத்திற்கு எடிட்டிங் செய்யவுள்ளார். தீபாவளியான் இன்று இப்படத்தின் முதல் பாடல் பதிவானது.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.