கார்த்தியின் ‘ஜப்பான்’ சென்சார் தகவல்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:31 IST)
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் தற்போது சரியான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜப்பான். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இந்த படத்தின்  சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி என்ற நிலையில் நவம்பர் பத்தாம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்