ஹிட் அடித்த கர்ணனின் “கண்டா வரச்சொல்லுங்க” ... புது போஸ்டர் ரிலீஸ்!!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (09:41 IST)
கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. 
 
சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலும் அதன் வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டது.  
இந்நிலையில், இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பாடலை லைக் செய்துள்ளார்கள். எனவே இதை கொண்டாடும் விதமாக இப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்