நடிகர் தனுஷுன் கர்ணன் பட முதல் சிங்கில் ரிலீஸ்

வியாழன், 18 பிப்ரவரி 2021 (19:59 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தின்  முக்கிய அப்டேட்டாக முதல் சிங்கி பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளார் தாணு தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கர்ணன் பட பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.

தனுஷ் தனது பகுதி டப்பிங்கை சிறப்பாகப் பேசி முடித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகளும், இசையமைப்பாளரின் பின்னணி இசைகோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 

வரும்  2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என தெரிந்தபடி தற்போது சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தின் கர்ணன் பட முதல் சிங்கில் பாடலை வெளியிட்டுள்ளார்.

 Kandaa Vara Sollunga  என்ற கர்ணன் படல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்