உதயநிதிக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:37 IST)
தமிழ் திரையுலகில் வெறும் பத்தே படங்கள் நடித்த சிவகார்த்திகேயன் இன்று மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் உள்ளார். அவரது படங்களுக்கு அஜித், விஜய் படங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்த 'கண்ணே கலைமானே' படத்தின் சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உதவி செய்யவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த  படத்தின் சிங்கிள் பாடலை இன்று மாலை ஐந்து மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்க்ரசி, வசுந்தரா காஷ்யப், ஷாஜிசென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தட் படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும், இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்