நடிகை கங்கனாவை சிறையில் தள்ள வேண்டும் - லாலுவின் மகள்

Webdunia
திங்கள், 17 மே 2021 (22:25 IST)
நடிகை கங்கனாவை சிறைக்க அனுப்ப வேண்டுமென லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி கருத்துத்தெரிவித்துள்ளார்.

கொரொனா இரண்டாம் அலை  இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில், கங்கையில் மிதந்துவரும் இறந்த உடல்கள் நைகீரியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என நடிகை கங்கனா ரனாவத் கூறிவருகிறார்.

இதற்கு  பீகார் மாநில முன்னாள் முதல்வரும்  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி. எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்,  அவரை சிறையில் தள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோகிணி  கூறியுள்ளதாவது:  கங்கனா ரணாவத் போலி ஜான்சிராணியாகச் செயல்படுகிறார்.  கங்கையில் மிதந்துவரும் பிணங்களை நைஜீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனப் பதிவிட்டுள்ளார். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படும் அவரை ஜெயிலுக்கு தள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்