தேர்தலைக் கணக்கில் கொண்டு எமர்ஜென்ஸி திரைப்படத்துக்கு சான்றிதழ் மறுப்பு.. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

vinoth

வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:41 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் படம் ரிலீஸ் தேதி சில முறை அறிவித்தும் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்த படம்  சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான ஜி ஸ்டியோஸ் மற்றும் கங்கனா ஆகியோர் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் “விரைவில் ஹரியானாவில் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு சீக்கியர்கள் வாக்கு கிடைக்காது என்பதால் இந்த படத்துக்கு சென்சார் கிடைக்கவிடாமல் பாஜக தாமதப்படுத்துகிறது.” என வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர், நடிகரான கங்கனா ரணாவத்  பாஜக எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்