‘விஸ்வரூபம் 2’ இப்போது இல்லை – கமல் அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (12:07 IST)
விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் இப்போது ரிலீஸாகாது எனத் தெரிவித்துள்ளார் கமல்.



வருகிற ரம்ஜான் தினத்தன்று ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகும் என செய்திகள் வெளிவந்தன. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் கமல், அந்தச் செய்திகளை மறுத்துள்ளார். ரம்ஜானுக்கு டிரெய்லர் ரிலீஸ் இல்லை என்றும், அதுகுறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல், பூஜா குமார், ராகுல் போஸ், ஆண்ட்ரியா நடிப்பில், கமல் இயக்கத்தில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டுக்குள் படம் ரிலீஸாகும் என்கிறார்கள்.

 
அடுத்த கட்டுரையில்