லோகேஷ் இயக்கத்தில் ரஜினியோடு நடிக்க தயார்! – வியப்பில் ஆழ்த்திய கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (13:28 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் ஒரு படம் நடிக்க விரும்புவதாக கமல்ஹாசனே கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றினார். இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த படம் பெறும் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறார். இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து இன்று பேட்டியளித்த கமல்ஹாசன் “நன்றியை தவிர சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. சந்தோஷத்தை கடந்து வெற்றி பயத்தை கொடுத்திருக்கிறது. வெற்றி கிடைத்தது போது என்று எண்ணவில்லை. இன்னும் வெற்றிகாக உழைப்போம்” என கூறியுள்ளார்.

மேலும் “ரஜினியோடு இணைந்து நடிக்க நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ரஜினிகாந்தும், லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் நான் நடிக்க தயார்” என கூறியுள்ளார். நீண்ட காலம் கழித்து கமல் – ரஜினி ஒரே படத்தில் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்