இந்தியன் 2 பட ஷூட்டிங் நிறைவு? வெளியான தகவல்

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (20:58 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஆகிறது. இப்படப்பிற்கு சில தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இப்படத்தில் கமல்ஹாசனோடு சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய வில்லனாக  எஸ் ஜே சூர்யாதான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில்,   இந்தியன் 2 பட ஷூட்டிங் சூரத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்