விக்ரம் வெற்றி… 5 மொழிகளில் பேசி நன்றி தெரிவித்த கமல்… வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (12:01 IST)
கமலின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் கிடைத்துள்ள வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் நன்றி தெரிவித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சக நடிகர்கள், இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்